ஷ்யாம் நீயூஸ்
16.02.2022
தூத்துக்குடி 35வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பெனில்டஸ் வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 35வது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக பெனில்டஸ் போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமி;ட்டி தலைவர் சோனியாகாந்தி ராகுல்காந்தி எம்.பி மாநில தலைவர் அழகிரி மாநில துணைத்தலைவர் சண்முகம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி, ஆசியுடன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றம் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ஆகியோர் வழிகாட்டுதலின் படி
போட்டியிடும் வேட்பாளர் பெனில்டஸ் 35வது வார்டுக்குட்பட்ட சிதம்பரநகர் கிழக்கு மேற்கு தெற்கு பிரையண்ட்நகர் அம்மன்கோவில் தெரு கணேஷ்நகர் பத்திநாதபுரம் ஜெயலாணி காலணி கணேஷ்நகர் சங்கர் காலணி உள்ளிட்ட பகுதிகளில் திமுக ஆட்சியின் சாதனைகளையும் அமைச்சர் கீதாஜீவன் செய்த பணிகளையும் எடுத்துக்கூறி மழைகாலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது செய்த வேலைகளையும் கருத்தில் கொண்டு தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இப்பகுதிக்கு முழுமையாக கிடைப்பதற்கு என்னாலும் உழைப்பேன் மாநகராட்சி நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற்று அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி கால்வாய் வசதி மின்விளக்கு வசதி என அனைத்து அடிப்படை பணிகளையும் செய்து கொடுப்பேன் அரசின் சார்பில் திருமண உதவி முதியோர் உதவி என அனைத்து திட்டங்களையும் நம் பகுதிக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வருவேன் வரும் உள்ளாட்சி தேர்தலில் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இதற்கிடையில் அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.