ஷ்யாம் நீயூஸ்
16.02.2022
முதல்வரை ஒருமையில் பேசிய சண்முகநாதன் லெப்ட் அண்ட் ரைட் விட்ட அமைச்சர் கீதா ஜீவன்!
தூத்துக்குடி வரும் 19 ஆம் தேதி நகர் மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்று திவிரமாக இரு கட்சிகளும் மக்களிடம் வாக்குகளை கேட்டு வருகின்றனர் நேற்று மாலை 38வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் அதிமுக வேட்பாளர் சந்திரா செல்லப்பாவிற்க்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் அப்போது பேசும்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பிரச்சார கூட்டங்களில் ஒருமையில் பேசினார் (அதுபோல அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய தூத்துக்குடி வந்த முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் கூட்டத்தின் போதும் அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் மிகக்கடுமையாக கலைஞர் கருணாநிதியும் ஸ்டாலினையும் ஒருமையில் பேசி வந்தார் ) நேற்று கூட்டத்தில் ஸ்டாலின் மகன் ஸ்டாலின் என்று உதயநிதி பெயர் தெரியாமல் பலமுறை உளறினார். சிறுது நேரத்தில் அதே இடத்திற்கு திமுக மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் மும்தாஜுக்கு ஏணி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்டு அமைச்சர் கீதா ஜீவன் வந்தார். அதிமு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசியதை கேள்விப்பட்ட கீதாஜீவன் அதே பாணியில் பதிலளித்தார். அரசியல் நாகரிகம் என்று தெரியாத கட்சியில் இருந்து வந்த உனக்கு நாகரீகமாக பேச உனக்கு தெரியாது முதல்வரை ஒருமையில் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. 25 ரூபாய் விளக்குமாற 200 கொடுத்து வாங்கி ஊழல் செஞ்ச அதிமுக வில் இருந்து வந்த உனக்கு என்ன தகுதி இருக்கு நல்ல எரிகின்ற டியூப் லைட்டை எடுத்து விட்டு எல்இடி லைட் என்று போலி லைட்டைப் பொருத்தி ஊழல் செஞ்ச உனக்கு என்ன தகுதி இருக்கு திமுக குடும்ப கட்சி என்று சொல்லி வரும் நீ பெருங்குளத்தில் உன் மகளையும தூத்துக்குடியில் உன் மகனையும் பதவியில் உட்கார வைக்க அதிமுக சார்பில் போட்டியிட வைத்து இருக்கிறாயே உனக்கு என்ன தகுதி இருக்கு தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலைகளை தூத்துக்குடி ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல் வெளிமாவட்டத்தில் உள்ள பழனிச்சாமியின் உறவினருக்கு கொடுத்த உன் கட்சிக்கும் உனக்கும் என்ன தகுதி இருக்கு விவசாய சட்டம் நீட் சட்டம் என அனைத்துக்கும் கையெழுத்து போட்டுவிட்டு வெட்கமில்லாமல் மக்களிடம் ஓட்டு கேட்க வருகிறிர்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று பதில் தாக்குதல் நடத்தினார்.
காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம் பேசும்போது படிப்பு கல்வியறிவு என்பது தெரியாத கட்சியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்ற அளவுக்கு அறிவுள்ளவர் உள்ள கட்சியில் இருக்கும் சண்முகநாதனிடம் நாகரீகமான வார்த்தைகளை எதிர்பார்க்கமுடியாது அவர்களை பொருட்படுத்தாமல் தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு பாடுபடும் திமுக மதசர்பற்ற கூட்டணி வேட்பாளர் போட்டியிடும் ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.