தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள கோவில் நில பிரச்சனை தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் பேச்சு வார்த்தை
ஷ்யாம் நீயூஸ்
14.02.2022
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள கோவில் நில பிரச்சனை தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் பேச்சு வார்த்தை!
தூத்துக்குடி, கோரம்பள்ளம், பெரியநாகிபுரம் கிராம மக்கள் வழிபாடு நடத்திவரும் சுடலைமாடசாமி கோவில் கோரம்பள்ளத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது இந்த கோவிலை அப்பகுதி மக்கள் சுமார் 200 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகிறார்கள். அந்த கோவில் அமைந்திருக்கும் இருக்கும் இடம் உட்பட 52 சென்ட் நிலம் சென்னையை சேர்ந்த சாம் தேவதாசன் என்பவர் தனக்கு சொந்தமானது என்று உரிமை கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்நதுள்ளார்.
இந்நிலையில், அந்த நிலத்தை கோவில் பெயருக்கு மாற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியநாயகிபுரம் கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடிய விடிய உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் 12.02.2022 ம் தேதி கோவில் நிலம் பிரச்சனை தொடர்பாக தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் கிராம மக்கள் கூறும்போது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவில் நிலத்தை மீட்பதற்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தபடும் என தெரிவித்தனர்.
இதில் ஊர் நிர்வாகிகள் முருகேசன், சப்பானிமுத்து, நாராயணன், மாரிமுத்து, பெரியநாச்சி பாப்பா, தமிழ்செல்வி, மணிகண்டன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.