ஷ்யாம் நீயூஸ் 09.12.2024 த வெ க தலைவர் விஜய் மீது அவதூறு செய்தி புகார்! தூத்துக்குடி சைபர் க்ரைம் போலிஸ் விசாரணை ! தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் குறித்து தனியார் youtube சேனலில் (MY INDIA 24x7) விஜய் விபச்சார அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்காமல் திமுகவை மட்டும் விமர்சிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவின் மொத்த ஏஜெண்டாக விஜய் மாறி உள்ளார். லண்டனில் வைத்து அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேசி உள்ளார் என்றும் உள்நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் இந்த சேனலால் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர். வதந்தியை பரப்பிய இந்த தனியார் youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினராகவும், சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன் காவல்துறை இயக்குனர், நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருந்தார். இதன...