ஷ்யாம் நீயூஸ்
05.01.2024
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 1933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை பாதுகாப்புத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றினர
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நிறைவுற்ற சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம், சிதம்பர நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் மற்றும் தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் பாத்திமா நகர் மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம். உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளையும் காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார், சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், அன்னலட்சுமி கோட்டு ராஜா உள்ளிட்ட மண்டல தலைவர்கள் மாநகர கவுன்சிலர்கள் அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு வரும் மாணவ மாணவியர்களுக்கு இந்த அறிவு சார்ந்த மையம் உபயோகம் உள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அந்த அளவுக்கு கட்டமைப்புகள் உடன் கூடிய நூலகங்கள் இணையதள வசதியுடன் கூடிய கணிகளை மேயர் வடி அமைப்பு செய்து உள்ளார். பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டு உள்ளார்