ஷ்யாம் நீயூஸ்
14.01.2024
நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கிராமம் காலான்கரை.இங்கு 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு பள்ளி கட்டிடத்தை சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.தற்பொது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 7 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பள்ளியின் சுற்று சுவர் மீது 7லட்சம் மதிப்பீலான கட்டித்தை கட்டிவருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் .டம்மி ஒப்பந்ததாரர்களை வைத்து சென்டர் விடபட்டு கட்டிடம் கட்டும் பணியை பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் பள்ளியின் சுற்று சுவர் மீது கட்டிடம் கட்டி ஊழலில் செய்து வருகிறார் என்று ஊர் பொது மக்கள் கூறுகின்றனர்.இப்பணிகளுக்கு பில் எழுதுவதற்கு பஞ்சாயத்து தலைவின் மகனை பணியில் அமர்த்தி உள்ளனர் என்றும் இதற்க்கு தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகளான பி.டி.ஓக்கள் அனுமதி வழங்கி லட்சங்களில் குளித்து வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணி நடைபெற்றுகின்ற இடங்களில் பணி நடை பெறும் திட்டத்தின் பெயர், மதிப்பீடு ,பணி நடை பெறும் காலம்.ஒப்பந்ததார் முகவரி எதுவும் இல்லாமல் பல பணிகளை நடத்தி வருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவி செல்வபிரபா அதிசயராஜ்.இதை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வேலை நடைபெறும் கிராமங்கள் பக்கம் வராமலே கமிஷன் வாங்கி கொண்டு பில் பாஸ் பண்ணுகின்றனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அடுத்தாக பட்டியல் இன மக்கள் மட்டுமே வாழும் இக்கிராம மக்களுக்கு அரசு திருவைகுண்டம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தினமும் வழங்கும் 60 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீரை காலாங்கரை கிராம மக்களுக்கு வழங்காமல் கோடி கணக்கான லிட்டர் குடி நீரை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டு குளத்து நீரை மட்டுமே குடிநீராக வழங்கப் படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.தற்போதைய பஞ்சாயத்து தலைவின் கணவர் இதற்க்கு முன்னால் கோரம்பள்ளம் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த போது போலி பில் போட்டு பல லட்சம் கையாடல் செய்தாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த வழக்கு தற்போது நீதி மன்ற நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்ட வேண்டிய கட்டிடத்தை காம்பவுண்ட் சுவர் மீது கட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமலும் சுகாதாரம் இல்லாமலும் இக்கிராமம் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.அரசு திட்டங்கள் மக்களுக்கு சரியாக முறையாக செயல்படுத்த படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் தன் கடமையை செய்ய தவறி வருவதாக திமுக அரசு மீது கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.