முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடி உயர் பதவியில் இருந்தாலும் இழி மகன் இழி மகன் தான்-தூத்துக்குடியில் சீமான் அதிரடி பேட்டி!

 ஷ்யாம் நீயூஸ்

28.01.2025

மோடி உயர் பதவியில் இருந்தாலும் இழி மகன் இழி மகன் தான்-தூத்துக்குடியில் சீமான் அதிரடி பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி சத்யா ரெஸ்டாரண்டில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்துகொண்டனர். மற்றும் கோவில்பட்டியில் நடைபெறும்   பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி வருகை தந்தார். நிர்வாகிகள் சந்திப்பு முடிந்த பின்பு

செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.

நாம் தமிழர் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை  தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார் . தமிழகம்- பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20 :20 ஆண் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.வரும் பிப்ரவரி மாதத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். மற்றும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் வெளிநாடு செல்வது அவருடைய தனிப்பட்ட பயணம் நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இந்தியா கூட்டணியிலிருந்து மம்தா அரவிந்த் கெஜ்ரிவால் நிதீஷ் குமார் ஆகியோர் வெளியே சென்று விட்டது குறித்து கேட்ட கேள்விக்கு இந்த நிலைதான் இந்தியாவிற்கும் வரும் தொடர்ந்து பாஜக ஆண்டு வந்தனர் என்றால்  துண்டு துண்டாக இந்தியாவை சிதைப்பார்கள் இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் வாழுகின்ற நாட்டை விட தான் விரும்பும் மதம் ஒன்றே பெரிது என்று கூறி செயல்படுபவார்களே  ஆனால் இந்த நாடு சுக்கு சுக்காக சிதறுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது இதை நான் சொல்லவில்லை புரட்சியாளர் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் ஒத்த கருத்துள்ளவர்கள் இல்லை பாஜகவில் ஒத்த கருத்துள்ளவர்கள் இணைகிறார்கள் அங்கு இந்துத்துவா கோட்பாடு அந்த கருத்தோடு ஒத்து போனவர்கள் இணைகிறார்கள். இந்தியா கூட்டணியில் அப்படி இல்லை ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளேயும் முரண்பாடு உள்ள கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி ஒன்று சேர வாய்ப்புள்ளதாக தெரியவில்லை அண்ணன் திருமாவளவன் சிதம்பரத்தில் வெற்றி பெற்றது வெறும் 5000 போட்டு வித்தியாசத்தில் தான் ஆனால் அங்கு திமுக கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் என பல கட்சிகள் இருந்தும் 5000 ஓட்டு வித்தியாசத்தில் தான் அவ்வளவு  பெரிய தலைவரே வெற்றி பெற முடிந்தது என்றால் திமுகவினர் அங்கு வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம் அதே நிலை தான் இந்தியா கூட்டணியில் நடக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள போதும் மத்திய அரசு நிவாரண நிதிகளை வழங்காதது குறித்து கேட்ட கேள்விக்கு நீங்கள் என்ன ராமனையா  கும்பிடுகிறீர்கள்? ராமர் கோவிலில் வழிபடுகிறீர்களா? நீங்கள் எல்லாம் யார் உங்களை ஏன் நான் வந்து பார்க்க வேண்டும் என்று பாஜக அரசு நினைத்து வருகிறது. இந்த மக்களுக்கு எப்போது அறிவு வரப்போகிறது தெளிவு பெற போகிறது என்று தெரியவில்லை. சதுரங்க போட்டி தொடங்கி வைக்க வர முடிகிறது கோலா இந்தியா போட்டி தொடங்கி வைக்க வர முடிகிறது கோவில் கோவிலாக போக முடிகிறது சாமியை தரிசிப்பதை விட ஒரு ஏழையை தரிசித்து அவர்களின் தேவையே நிறைவேற்றி வைப்பதை விட இறைபக்தி பெரிதாக ஒன்றும் இல்லை தெரியுமா? மோடி குளிர் மலை வெள்ளத்திலே காப்பாத்த வரல இனியா வந்து காப்பாற்ற போகிறார். தம்பி விஜய் அரசியலுக்கு வருவார் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவார் என்றார். ராமர் கோவிலை திறந்து வைத்தவுடன் பிஜேபிக்கு அதிக செல்வாக்கு வந்ததாக நினைப்பது தவறு ராமர் கோவில் கட்டும்போது என்ன செல்வாக்கு இருந்ததோ அதேபோல தான் திறக்கும் போதும் இருக்கும். கட்டி முடிக்கப்படாத கோயிலை அரசியலுக்காக திறந்து உள்ளனர் எல்லோரும் கோயிலை கட்டி திறப்பார்கள் நம்ம ஆளு திறந்து வைத்துவிட்டு கட்டுகிறார்.கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதாக அவர்களால் சொல்ல முடியுமா? முதல் தளம் கட்டப்பட்டுள்ளது மீதி எல்லாம் செட் போட்டு காண்பித்துள்ளனர் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திறப்பார்கள் என்று நான் முன்பே சொன்னேன் அது தற்போது நடந்துள்ளது. சரி பிரதமர் நிலை என்ன? உள்ளே போனாரா தொட்டு தரிசிக்க முடிந்ததா? அவரை ஒரு மனிதராக மதித்தார்களா? நாட்டின் பிரதமராக நடத்த வேண்டாமா? ஒரு மனிதனாக நடத்த வேண்டாமா? சனாதான தர்மம் பேசிய பெருமக்கள் எங்கே போனார்கள் நாட்டின் முதன்மை அமைச்சருக்கு இந்த நிலைமையா? ராமர் கோவில் திறப்பு விழாவின் போது  பிரசாத லட்டை கொடுத்துக் கொண்டே வரும்போது பிரதமரை தாண்டி போய் யோகி ஆதித்யநாத் கொடுத்தார்களே? இதிலிருந்து தெரியவில்லையா நீ எவ்வளவு உயரத்திற்கு போனாலும் நீ இழிமகன் இழிமகன்தான். தான் நாட்டின் முதல் குடிமகனே ஆனாலும் நீ பழங்குடி தான் நீ விதவைதான் உன்னை கோவில் உள்ளே வரவிடமாட்டேன் உன்னை பாராளுமன்ற கட்டிடம் திறக்க கூப்பிட மாட்டேன் நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும் ராம்நாத் கோவிந்த் கோவில் உள்ளே போக முடிந்ததா? மரத்தின் நிழலில் இருந்து தானே யாகம் வளர்த்து விட்டுப் போனார். இந்தியாவின் முதல் குடிமகனுக்கே தீண்டாமை இருக்கும் என்றால் நான் எம்மாத்திரம்? சமத்துவம் சகோதரத்துவம் வேற்றுமையில் ஒற்றுமை என்பது எல்லாம் எவ்வளவு வெற்று வார்த்தைகள் பார்த்தீர்களா? இது சனாதன தர்மமா அல்லது கருமமா?. பத்து ஆண்டு ஆட்சி செய்த பிரதமர் மக்களிடம் தான் வர வேண்டும் கோவில் கோவிலாக கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் அந்த சாமிகளா ஓட்டு போட போகுது சாமிகள் என்ன பூத்து ஏஜெண்டா? பெருமாள் கோவில் ராமர் கோவில் போகிற பிரதமர் ஏன் முருகன் கோவிலுக்கு போகவில்லை முருகன் பிஜேபியின் பிராப்பர்ட்டி இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். தேர்தலை சந்திக்காத நிர்மலா சீதாராமனுக்கு ஏன் உயர்பதவி வழங்கப்பட்டது? தேர்தலில் தோற்றுப் போன அருண் ஜெட்லிக்கு எதுக்கு நிதியமைச்சர் கொடுத்தீர்கள்? தேர்தலில் நின்று மக்களே சந்திக்காத ஜெய்சங்கர் சுப்பிரமணியத்திற்கு எதுக்கு வெளியூர் துறை அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்? மக்களை மதிக்காதவர்களுக்கு ஏன் உயர் பதவி கொடுக்கப்படுகிறது? இந்தியாவில் பாஜகவினரை போன்று ஒரு பெரிய கொள்ளை கூட்டத்தை பார்க்க முடியாது?

வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதியாக அரசியல் அடிப்படை மாற்றங்கள் தான் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் இந்தியாவை பாஜகவிடமிருந்து என்னால் காப்பாற்ற முடியாது ஆனால் தமிழகத்தை என் நாட்டை காப்பாற்ற என்னால் முடியும். நாட்டில் வேலை வாய்ப்பில்லை பொருளாதாரம் என்ன ஆச்சு மணிப்பூரில் பெண்கள் கொலை ஆகியவற்றைப் பற்றி கேட்டால் எதற்கெடுத்தாலும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி ஆட்சியை நடத்தி வருகிறார்கள் நாமும் அவர்கள் பாணியிலேயே ஜெய் ஸ்ரீராம் என்றும்  ராமனின் வில் போன்று ஆயுதத்தை எடுத்தால் மட்டும்தான் சரிவரும் என்று தெரிவித்தார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...