ஷ்யாம் நீயூஸ்
தூத்துக்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கு பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதிகளில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போல்பேட்டை - டிஎம்சி காலனி பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.