திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் 1 கோடி காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
ஷ்யாம் நீயூஸ்
19.01.2024
சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் 1 கோடி காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி முதல்மாநில மாநாடு அப்போது மாநில செயலாளராக இருந்த முக.ஸ்டாலின் தலைமையில் 2007ல் நெல்லையில் நடைபெற்றது. அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உடனிருந்தனர்.