ஷ்யாம் நீயூஸ்
04.01.2024
அதிமுக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு!
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஹென்றி( 61 )இவர் அதிமுகவில் அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினராகவும் உள்ளார் . நாசரேத் திருமண்டல நிர்வாகிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொருளாளர் மோகன்ராஜ்க்கு ஆதரவாக திருமண்டல அலுவலகத்திற்க்குள் இவருடன் பலர் சென்றுள்ளனர்.அப்பபோது தற்போது உள்ள நிர்வாகிகள் தடுத்ததாக தெரிகிறது. அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அலுவலகத்தில் இருந்த ஹரிஷ் ராபின்சன் ஆகிய இருவரும் தங்களை கம்பி மற்றும் கைகளாலும் தாக்கி காயப்படுத்தியதாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதே போல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொருளாளராக இருந்து வரும் டேவிட் ராஜ் அளித்துள்ள புகாரில்
தான் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே பொருளாளராக இருந்த மோகன்ராஜ் அருமை நாயகம் முறைகேடு புகார் காரணமாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இதனை ஏற்றுக் கொள்ளாத மோகன்ராஜ் அருமைநாயகம், ஹென்றிதாமஸ்,ஜான்சன் டேவிட், ஸ்டாலின்,அருள் ஜெயக்குமார், ஆகிய 5 பேர் ஆயுதங்களுடன் வந்து திருமண்டல நிர்வாக அலுவலகத்திற்குள் இருந்த தன்னை கைகளால் பலமாக தாக்கி காயப்படுத்தி அலுவலகத்தில் இருந்த பூந்தொட்டி கண்ணாடி மேஜை நாற்காலி, சேர் முன் பக்க கதவு, கதவின் கண்ணாடி, கைபிடி, பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார் அதன் பெயரிலும் வட பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.