ஷ்யாம் நீயூஸ்
18.01.2024
பொங்கல் விளையாட்டு விழா 5 கி.மி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வாலிபருக்கு முதல் பரிசு
தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் தமிழக கிராமங்களில் பொங்கலுக்கு அடுத்த நாள் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் காலான்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வாலிபர்களுக்கு கிராமம் சார்பாக விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுகளில் மிகச் சிறந்த போட்டியாக 5 கிலோமீட்டர் ஓட்டபந்தயமும் . 5கி.மீ சைக்கிளில் ரேஸும் நடைபெற்று. ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசை காலான்கரையை சார்ந்த கன்னி ஈஸ்வரனும் சைக்கிள் ரேஸ்ஸின் முதல் பரிசை முனியசாமியும் தட்டி சென்றனர். ஊர் தலைவர் பொன்னுலிங்கம் தலைமையில் விழா கமிட்டி சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஞானக்கண். வார்டு உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் சமுக ஆர்வலர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.