ஷ்யாம் நீயூஸ்
27.01.2024
தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.
திட்டத்தின் படி மக்கள் அதிகமாக பயன் பெறும் வகையில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மின்;சாரத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, காவல்துறை, மருத்துவதுறை உள்பட அத்தியாவசிய துறைகளின் அதிகாரிகள், ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மழை வெள்ள பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதால்;, இந்த முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் 60 வார்டுகளிலும் இந்த முகாம் நடைபெற்றது. இந்நிலையில் வார்டு 1,2,3, பகுதிகளுக்கு போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் நடைபெற்ற முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து எல்லாத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தமிழக முதலமைச்சர் உத்தரவு படி தீர்வு காண வேண்டும். பொதுமக்களை எவ்வித சீரமத்திற்கும் உள்ளாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் பொதுமக்களும் தாங்கள் கேட்கும் ஆவணங்களை முறையாக கொடுத்து உதவுவார்கள். என்று கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது கவுன்சிலர்கள் ரெங்கசாமி, காந்திமணி, சுப்புலட்சுமி கணேசன், மாநகராட்சி உதவி ஆணையர் தனசிங், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர் மந்திரமூர்த்தி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், உள்பட பலர் உடனிருந்தனர்.