ஷ்யாம் நீயூஸ்
05.01.2024
தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை
தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் ஓட்டப்பிடாரம் செக்காரக்குடி குறுக்குச்சாலை புதியம்புத்தூர் சாமிநத்தம் முப்பிலிவெட்டி குலசேகரநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது .ஏற்கனவே கடந்த டிசம்பர் 17 ,18 அன்று பெய்த அதி கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களிலும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தும் விவசாய நிலங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டது .இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.