ஷ்யாம் நீயூஸ்
14.01.20224
தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி மூணாவது சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பித்தார்.
விழாவில் வட்டச் செயலாளர் மூக்கையா தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, ஜெயசீலி, விஜயலட்சுமி, சரவணகுமார், ராஜதுரை, பட்சிராஜன், மாமன்ற உறுப்பினரும் பகுதி செயலருமான ராமகிருஷ்ணன், மண்டல செயலாளர் பால குருசாமி, வட்ட செயலாளர்கள் சுரேஷ், சுப்பையா, சரவணன் உள்பட மகளிர் அணியினர், நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.