தூத்துக்குடி
ஷ்யாம் நீயூஸ்
23.01.2024
குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு !
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி தியாகம் குறித்து கவிதை எழுதிய தூத்துக்குடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி டிவைனாவிற்கு வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிப்பதுடன் குடியரசு தின அணிவகுப்பை மத்திய அரசு செலவில் விமானத்தில் சென்று பெற்றோருடன் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கௌரவித்துள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் வீராங்கனை நினைவு கூறும் வகையிலான கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்தியது. இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் கவிதை பிரிவில் தூத்துக்குடி பி.எம்.சி பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டிவைனா சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் வீரம் மற்றும் தியாகத்தை நினைவு கூறும் வகையிலான கவிதையை ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். மாணவி டிவைனாவின் கவிதை சிறந்த கவிதையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் கல்வித் துறையால் தேர்வு செய்யப்பட்டது.. இதைத் தொடர்ந்து மாணவி டிவைனாவிற்கு ரூபாய் 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டதுடன் வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட டெல்லிக்கு விமான மூலம் பெற்றோருடன் சென்று வர விமான டிக்கெட் மேலும் நிகழ்ச்சியில் விருது வழங்கிகவுரவப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து 100 பேரும் தமிழகத்திலிருந்து ஒரு பிரிவிற்கு ஒருவர் வீதம் மொத்தம் மூன்று 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தான் சுதந்திர போராட்ட வீரர்களின் கவிதை எழுதி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என மாணவி தெரிவித்தார் இந்த சாதனையை படைத்த மாணவி டிவைனாவை பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்