தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு! ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
ஷ்யாம் நீயூஸ்
23.01.2024
தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு! ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக 27-12-1956 ஆம் சட்டம் இயற்றப்பட்டது இதை ஆண்டுதோறும் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ் ஆட்சி மொழி வார விழா தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் கனக லட்சுமி தலைமையில் தூத்துக்குடி கோட்டாட்சிய தலைவர் மனோகரன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நகரின் முக்கிய வீதியில் வழியாக இந்த பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் தூத்துக்குடி நகரில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரியில் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு தமிழ் மொழி குறித்த பதாகைகளை ஏந்தியவாறு வந்தனர் இந்த பேரணி தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை நிறைவு பெற்றது.