ஷ்யாம் நீயூஸ்
01.04.2024
தூத்துக்குடியில் வெள்ள நீர் வடியாததால் நோய் தொற்று பரவும் அபாயம்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பாரதி நகர் 5வது தெருவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள நீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் சாக்கடையாக தேங்கி காட்சியளிக்கிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 17 பாரதிநகர் ஐந்தாவது தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான முத்துகிருஷ்ணன் பிள்ளை நினைவு பூங்கா உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு இந்த பூங்காவில் இன்னும் வெளியேறாமல் தேங்கியுள்ளதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். மழை பாதிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் தேங்கிய நீரை அகற்றாமல் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக தற்போது மாறி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயருக்கு மனு அளித்துள்ளனர் .அந்த மனுவில் பூங்காவில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மின்விளக்குகள் சரி செய்து தர வேண்டும் மீண்டும் பூங்காவை பழைய மாதிரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் உடனடியாக வேலைகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.