ஷ்யாம் நீயூஸ்
07.12.2024
யானைப்பாகனுக்கு ஒரு நீதி! டாஸ்மாக் ஊழியருக்கு ஒரு நீதியா?!!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உதவி யானைப்பாகன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் உறவினரை யானை இருக்கும் இடத்திற்கு 18.11.2024 அன்று அழைத்து சென்று செல்பி எடுத்தபோது யானை தாக்கி இருவரும் உயிரிழந்தனர். பாகனின் குடும்ப வாழ்வாதார சூழ்நிலையை கருதி அரசு நிதியும் வழங்கி யானைப்பாகன் மனைவிக்கு அரசு பணி நியமன ஆணையும் இன்று (07.12.024) வழங்கியுள்ளது.ஆனால் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது விழுப்புரம் மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கடைகளில் தண்ணீர் புகுந்துள்ளதா சேதாரம் ஏதும் மேற்பட்டு உள்ளதா என்று கடை ஊழியர்களை கடைக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதற்காக 01.12.2024 அன்று சென்ற டாஸ்மாக் கடை எண் 11405 ஊழியர் சக்திவேல் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவர் குடும்பத்திற்கு நிதி கேட்டும் அவரது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் சங்கங்கள் கோரிக்கை வைத்து தமிழக முழுவதும் போராடி வருகின்றன. தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மரணம் அடைந்த உதவி யானைப்பாகன் குடும்பத்திற்கு அரசு பணி நியமன ஆணையை வழங்கிய அரசு . அரசுக்கு வருவாய் பெற்று தரும் டாஸ்மாக் ஊழியர் தான் பணியை செய்யும் போது இறந்த பணியாளர் குடும்ப உறுப்பினருக்கு பணி ஆணை வழங்க யோசிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். அரசு ஆளுக்கு ஒரு நீதி வழங்காமல் சமமாக நீதி வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றன.