ஷ்யாம் நீயூஸ்
06.11.2024
தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியின்போது வெள்ளத்தில் மரணம் அடைந்த ஊழியர் சக்திவேல் மரணத்துக்கு நீதி கேட்டும். தமிழக அரசு சார்பில் அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டியும் அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரியும், வருங்காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு முழு பாதுகாப்பு வழங்க கோரியும் 11. 12. 2024 அன்று சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் அருகில் காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.