தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு 25க்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!
ஷ்யாம் நீயூஸ்
20.07.2024
தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு 25க்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!
தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில் உள்ள நிலா சீ புக்ஸ் என்ற தனியார் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 25க்கும் அதிகமான பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(19.07.2024) இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டு 25க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொழிற்சாலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் முரளி கண்ணன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவுகள் தெரியும் வரை பணியாளர்கள் யாரும் பணிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.