ஷ்யாம் நீயூஸ்
06.07.2024
கோரம்பள்ளம் குளம் உடைப்பு அடைப்பில் ஊழலா?.மீண்டும் தூத்துக்குடியை வெள்ளம் சூழும் அபாயம்!
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் காலான்கரை அருகே ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தூத்துக்குடி முழுவதும் வெள்ளத்தில் மிதந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். பலர் தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் இழந்தனர்.
தற்போது இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனர். மீண்டும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோரம்பள்ளம் குளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இந்தப் பணி தற்போது இரவோடு இரவாக போதிய வெளிச்சம் இல்லாமல் லாரியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் முட்டு அளவு நீரில் தண்ணீரை வெளியேற்றாமல் சிமெண்ட் கலவையை கொட்டி கட்டுமான பணி நடைபெறுவதாகவும் இதன் உறுதித் தன்மை நம்ப முடியும் அளவில் இல்லை என்பதாலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மழை காலம் ஆரம்பமாக இருப்பதாலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர் மற்றும் இது தொடர்ந்து நடைபெறுமானால் வருங்காலங்களில் தூத்துக்குடியில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தனர் .