ஷ்யாம் நீயூஸ்
02.07.2024
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் போராட்டம் !
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி வாசலில் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் காமராஜ் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளையடித்து வருகின்றனர் கல்வித்தந்தை காமராஜரின் பெயரில் கல்லூரி வைத்துக்கொண்டு கல்வியின் பெயரில் கொள்ளை அடித்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய மாணவர்களில் கல்வி கனவை சிதைத்திடும் கல்வி கட்டணத்தை குறைத்திட வேண்டும் கல்வி கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் ஸ்டுடென்ட் யூனியன் சிந்தாபாத் முழக்கங்கள் இட்டும் சமூக நீதி பேசும் ஸ்டாலின் அரசு தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றும் அதிக கட்டணத்தை தடுத்து நிறுத்தி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கும் அதிகம் கட்டண வசூலிக்கப்படுவதாகவும் ரெகுலர் மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர்கள் எஸ் எப் ஜ மாணவர் சங்க நிர்வாகிகள் தலமையில் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.