ஷ்யாம் நீயூஸ்
05.02.2024
காம்பவுண்ட் சுவர் மீது அரசு பள்ளி கட்டிடம் கட்டி வருதல் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் காலான்கரை.இங்கு ஐந்தாம் வகுப்புவரை உள்ள பள்ளி உள்ளது.ஐம்பதுக்கும் அதிகமான மாணவ குழந்தைகள் பயின்று வருகின்றனர்.பள்ளியை சுற்றி ஐந்து அடி உயரத்தில் சுற்று சுவர் உள்ளது.தற்போது மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு 7 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த பணத்தை கையாடல் செய்ய நினைத்த ஒப்பந்ததாரர் ஏற்கனவே கட்டிய பள்ளியின் சுற்றுசுவர் மீது மீதி கட்டத்தை கட்டி வருகிறார்.இவ்வாறு கட்டும் கட்டிடத்தால் தங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம் என குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் பொறியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது.அப்படியா இடித்து கட்ட சொல்கிறேன் என்று கூறினார்.ஆனால் இது வரை முறையாக நடைபெறவில்லை .இதுவரை கட்டிடம் கட்டிய செலவு அதை இடிக்கும் செலவு ஆகியவற்றுக்கு மீண்டும் பஞ்சாயத்து அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்யுமா அல்லது ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் கழித்துவிட்டு மீதம் இருக்கும் பணத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்படுமா சுற்று சுவர் மீது இவ்வளவு உயரம் கட்டுமானம் கட்டும் வரை பஞ்சாயத்து தலைவர் வட்டார வளர்ச்சி கட்டுமான பொறியாளர்கள் ஏன் தடுக்க வில்லை அரசு பணம் விரயம் ஆவதை கண்காணிக்காத வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீதும் பஞ்சாயத்து தலைவர் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் சிட்டிசன் தகவல் பலகையும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.