ஷ்யாம் நீயூஸ்
05.02.2024
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்! போலீசார் கைது!
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் ஏஜசிசிடியூ தொழிலாளர்கள் மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கீழ்க்கண்ட கோஷங்களை வலியுறுத்தினர்
தேர்தல் வாக்குறுதி படி தமிழக அரசு சுமைதூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 2011ம் ஆண்டு வரன்முறைப்படுத்தபட்டு 2020 ஆண்டு பச்சை அட்டை பெற தகுதி படைத்த 3525 தொழிலாளர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு முதல் பச்சை அட்டை வழங்க வேண்டும்.வார விடுப்பு ஊதியத்தை அந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.பணிவேட்டில்2020லிருந்து பதிவு செய்ய வேண்டும். 2019 ஆம் ஆண்டில் இருந்து பணி செய்துவரும் சுமந்து தூக்கும் தொழிலாளர்களை அரசு உத்தரவுபடி வறைமுறைபடித்தி பி எப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத அவுட் சோர்ஸ் முறையை கைவிட வேண்டும். வாகனங்களில் ஓவர்லோடு ஏற்ற இறக்க சுமைதூக்குவோர் பேச்சுவார்த்தை மூலம் அட்டி கூலி உயர்த்தி வழங்கும் முறை தொடற நடவடிக்கை எடுக்க வேண்டும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் . தொழிலாளர் கூலியை சுரண்டும் சட்டவிரோத ஒப்பந்த முறையை ரத்து செய்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சம வேலைக்கு சமூக மதியம் வழங்க வேண்டியும். சுமை தூக்குவோருக்கு வழங்கும் கூலி மற்றும் பஞ்சபடியாக என இரண்டு வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தி வருகிறது. இதில் ஜனநாயக பூர்வ தீர்வு ஏற்பட நிர்வாகம் தரப்பில் ஆஜராகி வழக்கு விரைந்து முடிவுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர் .இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராஜசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் துரை துணைத்தலைவர்கள் வைகுந்தராஜ், ஆறுமுகம், கருப்பசாமி துணை பொது செயலாளர் பொன்ராஜ், கணேசன், மாநில அமைப்பு செயலாளர் குகானந்தன், செல்வராஜ், ஆறுமுகம், ராஜேஷ் கண்ணா மற்றும் தொழிலாளர்கள் பலர்கலந்து கொண்டனர்.