ஷ்யாம் நீயூஸ்
25.08.2025
தூத்துக்குடி பிஜேபினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையையேற்று பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி வடக்குமாவட்ட பிஜேபி கல்வியாளர் பிாிவு செயலாளர் கல்யாணசுந்தரம் மகளிர் அணியை சேர்ந்த மதிவாணி உள்பட 30க்கும் மேற்பட்ட பிஜேபியை சேர்ந்தவர்கள் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
பின்னர் சால்வை அணிவித்து வாழ்த்து தொிவித்து கூறுகையில் திராவிட முன்னேற்றக்கழகம் 75 ஆண்டு பவள விழாவை கொண்டாடிய இயக்கமாகும். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் தலைமையேற்ற நீங்கள் எல்லாம் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம் உங்கள் பகுதிக்கும் நீங்கள் வைக்கும் கோாிக்கைகள் அனைத்தும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2026ல் பொதுத்தேர்தலில் மக்களுக்கு செய்த சாதனைகளை சொல்லி உங்கள் பகுதியில் திமுக கட்சிக்கும் தமிழக முதலமைச்சர் தளபதியாருக்கும் வலுசேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். உங்கள் உழைப்பிற்கேற்ப திமுகவில் அங்கீகாரம் எல்லா வகையிலும் கிடைக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், கவுன்சிலர் தெய்வேந்திரன், பகுதி பொருளாளர் உலகநாதன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், லயன்ராஜன், மற்றும் கருணா, மணி, காசிராஜன், அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.