ஷ்யாம் நீயூஸ்
06.09.2024
கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி புரோட்டா மாஸ்டர் பலி!
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற புரோட்டா மாஸ்டர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
மேல தட்டப்பாறை அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் பெருமாள்(42) த/ பெ சிவன். இவரது தனது நண்பர்களுடன் கோரம்பள்ளம் குளத்தில் குளித்துள்ளார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு புதுக்கோட்டை ஆய்வாளர் வனசுந்தரிடம் ஒப்படைத்தனர் உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை ஆய்வாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . இவருக்கு மனைவி கவிதா பெண் குழந்தை சிவாசினி ஆகியோர் உள்ளனர் . இதுகுறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.