தூத்துக்குடி:இமானுவேல் சேகரன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஷ்யாம் நீயூஸ்
11.09.2024
தூத்துக்குடி:இமானுவேல் சேகரன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட இமானுவேல் சேகரன் திரு உருவப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிஎம்.பி, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ,மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.