தூத்துக்குடி வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்! தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஷ்யாம் நீயூஸ்
26.11.2024
தூத்துக்குடி வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்! தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் கட்ட போராட்டமாக 26 நவம்பர் முதல் காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்..
இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசானையை உடன் வெளியிட வேண்டும் .மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். முதல்நிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கு நிலையை கலைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடன் வெளியிட வேண்டும் கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் .முழுப்புலம் பட்டா மாறுதல் செய்திடும் அதிகாரத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு பிரித்து வழங்கியதை உடனடியாக கைவிட்டு பழைய முறையை தொடர்ந்திட அனுமதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர். சுவாமிநாதன் மாவட்ட தலைவர் வருவாய் துறை அலுவலர் சங்கம் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.