முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.

 ஷ்யாம் நீயூஸ்

15.10.2024

தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில் இருந்து  தூத்துக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசரமாக வரும் பொழுது  அவர்களது காருக்கு இடையூறாக வழி கொடுக்காமல் வந்ததாக கூறி ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் ஜெகன் என்பவரை சரமாரியாக இரண்டு முன்னாள் அமைச்சர்களின்  ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர் . படுகாயம் அடைந்த பாதிரியார் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய பாதிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில் உடல் குறைவால் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது காரில் வந்துள்ளார் .

அப்போது அவருக்கு பின்னால் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடியில் நடைபெற உள்ள அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள விரைவாக வந்த  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் முன்னாள் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரின் ஆதரவாளர்கள் இவரது காருக்கு முன்னே செல்ல வழி கேட்டு ஒலி எழுப்பியுள்ளனர்.

ஆனால் முன்னாள் சென்று கொண்டிருந்த பாதிரியார் ஜெகன் தனது காரை ஒதுக்க முடியாமல் திகைத்துள்ளார் 

இந்த நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாத்து ஓடை  பாலம் அருகே வந்தபோது இவர் தனது வாகனத்தை ஒதுக்கிய போது இவருக்கு முன்பாக இரண்டு கார்கள் மற்றும் இவருக்கு பின்னாள் வந்த மூன்று கார்களில் வந்த அதிமுக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் இவரது காரை எடுக்க விடாமல் நிறுத்தி அவரது கார் கதவை திறந்து அடித்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிஎஸ்ஐ போதகர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை  முற்றுகையிட்டனர். 

பாதிக்கப்பட்ட போதகர்  ஜெகனுக்கு சிடி ஸ்கேன்  போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்ய மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த தமிக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெகனை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ஆறுமுகநேரி குருவானவர் ஜெகன் அதிமுகவினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை கடுமையாக மிரட்டியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜூ அவர்களின் ஆதரவாளர்கள் இவரை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறிய அவர், அடக்கு முறையை கையாள வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஜனநாயக முறையானது அல்ல, சாமானியர் சாலைகளில் பயணிக்க கூடியது இதில் பயணம் செய்யக்கூடியவர்களை தாக்கி கெட்ட வார்த்தைகளால் ஏசியதோடு மட்டுமில்லாமல் அவரை மிரட்டியுள்ளனர் நிச்சயமாக அரசு தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இந்த நிலையில் அதிமுக முன்னால்  அமைச்சரும் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் தற்போதைய கோவில்பட்டி எம் எல் ஏ  கடம்பூர் ராஜூ, அதிமுக தலைமை நிலைய செயலாளர் முன்னால் அதிமுக அமைச்சரும் கோவை புறநகர் தெற்க்கு மாவட்ட செயலாளரும் தற்போதைய தொண்டாமுத்தூர் எம். எல் .ஏ வேல் மணி உள்பட 17 நபர்கள் மீது  ஜெகன் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...