தூத்துக்குடியில் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்திய தலமை ஆசிரியை!ஊழலை மறைக்க பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்க முயற்ச்சியா?
ஷ்யாம் நியூஸ்
10.10.2022
தூத்துக்குடியில் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்திய தலமை ஆசிரியை!ஊழலை மறைக்க பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்க முயற்ச்சியா?
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட விக்டோரியா CBSE பள்ளி மற்றும் நிர்வாகம் தற்சமயம் பழைய நிர்வாகிகளான SDK ராஜனிடம் இருந்து மாறி புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் DFS கிப்சன் தலமையில் இயங்கி வருகிறது.SDK ராஜன் அணியை சார்ந்த VCS பள்ளியின் தலைமை ஆசிரியர் தலமையில் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர், வாட்ச்மேன், மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்கவில்லை என கூறி பள்ளியில் வேலை செய்யும் அத்துணை ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினார் பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அது உள்ளிருப்பு போராட்டமாக மாறியது .கடந்த SDK ராஜன் ஆதரவாளராக இருந்து பணிபுரிந்து வரும் VCS பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபியா செல்வராணி கடந்த காலங்களில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல முறைகேடுளில் ஈடுபட்டுள்ளதாக நாசரேத் திருமண்டல நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது .தனது மாத ஊதியம் 40 ஆயிரத்திலிருந்து 90ஆயிரத்திற்கும் அதிகமாக தனக்கு தானே திருமண்டல கமிட்டி ஒப்புதல் பெறாமேலே உயர்த்தியுள்ளார் .3 கோடி மதிப்பிலான பணிகள் டெண்டர் விட்டதில் SDK ராஜனுடன் சேர்ந்து தனது கணவருக்கு பணிகளை வழங்கி உள்ளார் .மற்றும் பள்ளியில் வரும் சேர்க்கை பிற கட்டணங்களை முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் மற்றும் புதுப்பிக்கபடாத வகுப்பறைகளை புதுப்பிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பல நூதன மோசடியில் ஈடுட்டதாக தலைமை ஆசிரியர் ஷோபியா செல்வராணி மீது விசாரணை மேற்கொள்ள ஏற்கனவே நாசரேத் திருமண்டல நிர்வாகம் விசாரணை கமிஷன் ஒன்றை நியமித்துள்ளது .பல தடவை விசாரணை கமிஷனுக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தலைமை ஆசிரியர் தன் மீதுள்ள ஊழல் புகாரை திசை திருப்ப பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை தற்போது உள்ள நிர்வாகம் பணியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று தவறான தகவலை சொல்லி போராட்டத்தில் ஈடுபட செய்துள்ளார் என்று நாசரேத் திருமண்டல சபை மக்கள் தெரிவிக்கின்றனர் .இது குறித்து பள்ளியை தொடர்பு கொண்டபோது அலுவலக ஊழியர் தெரிவிக்கையில் விசாரனை கமிஷனுக்கு ஆஜரானதாகவும் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படும் முன்பே தலைமை ஆசியர் கணவர் டென்டர் எடுத்துவிட்டார் என்றும் கூறினார்.இச்சம்பவம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.