தூத்துக்குடியில் அதிமுக பொன்விழா நிறைவு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை
ஷ்யாம் நியூஸ்
17.10.2022
தூத்துக்குடியில் அதிமுக பொன்விழா நிறைவு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணையின் படி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 50வது ஆண்டு பொன்விழா நிறைவு 51வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி டூவிபுரம் மாவட்ட அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் அலங்கரிக்கப்;பட்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிpவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் சத்யாலட்மணன், முருகன், இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணைச்செயலாளர் வலசை வெயிலுமுத்து, வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச்செயலாளர் கோமதி மணிகண்டன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி, பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி, நிர்வாகிகள் வக்கீல் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள், குமார், உதயகுமார், வட்டச் செயலாளர்கள் உலகநாதன், வெங்கடேஷ், திருச்சிற்றம்பலம், முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனப்பட்டு, மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், பிராங்கிளின் ஜோஸ், சுரேஷ், அலெக்ஸ்ஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் காய்கனி மார்க்கெட் பகுதியில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளரும் கீழுர் கூட்டுறவு வங்கி தலைவருமான சி.த.சு.ஞான்ராஜ், மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.