தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்
ஷ்யாம் நியூஸ்
25.10.2022
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை அமைச்சர் கீதா ஜீவன். விபத்து காலத்தில் ஏற்படும் அறுவை சிகிச்சையை உடனடியாக செய்து விபத்துக்குட்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான நவீன அறுவை சிகிச்சை மையம் மற்றும் 8 நவீன படுக்கைகள் உள்டக்கியதாகும் இனி அவசர சிகிச்சையில் பிரிவில் சேர்க்கப்படும் பயணிகள் இனி மேல் தளத்திற்கு செல்லாமல் கீழ்த்தரத்திலேயே மருத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ராஜவேல் முருகன் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.