தூத்துக்குடி மாநகருக்கு எல்இடி விளக்குகள் அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி
ஷ்யாம் நியூஸ்
25.10.2022
தூத்துக்குடி மாநகருக்கு எல்இடி விளக்குகள் அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றப்பின் தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாநகராட்சியில் நடைபெற்ற முதல் மாமன்ற கூட்டத்தில் மாநகரை மேலும் ஒளிருட்டும் வண்ணம் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் மற்றும் தேவையான அனைத்து வார்டுகளிலும் புதிதாக எல்இடி விளக்குகள் அமைப்பேன் என்று உறுதி கூறியபடி தூத்துக்குடி மாநகருக்கு 2887 எல்இடி விளக்குகள் அமைக்க தமிழகம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, ஆகியோர் நிதி ஓதுக்கீடு செய்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த திமுக துணை பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோருக்கு எனது சார்பிலும் மற்றும் மாநகர மக்களின் சார்பிலும் நன்றியை மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.