ஷ்யாம் நியூஸ்
18.10.2022
தூத்துக்குடியில் மூன்று ஜோடிக்கு கூட்டுத்திருமணம் நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்டம் பாத்திமாநகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தில் 64ம் ஆண்டு மகோன்னத பெருவிழாவை முன்னிட்டு மண இணையர்களுக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் கூட்டுத்திருமண திருப்பலி நடைபெற்றது.
அதில் சில்வஸ்டர் சூர்யா, பிராங்கோ கிராஸ்வின், அகஸ்டின் சுபர்னா ஆகிய மூன்று மண இணையர்களுக்கு 26 கிராம் தங்கத்தாலி கட்டில் பீரோல், வாஷிங்மிஷின் பிரிட்ஜ் என சுமார் 13 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் நடைபெற்ற மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பரதர் நல தலைமை சங்க தலைவர் டாக்டர் ரெனால்டு வில்லவராயர் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரைட்டர், உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதன்பின் அசைவ விருந்து வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை பாத்திமா நகர் பங்கு இறைமக்களோடு இணைந்து இருதய சபை அருட்சகோதரிகள் பங்குதந்தை ஜேசுதாஸ், பர்னாந்து உதவி பங்குதந்தை விமல்ஜென், ஓலிபர், சில்வா, செய்திருந்தனர்.