தூத்துக்குடி 3ம் கேட் மேம்பாலம் பணி நிறைவு பெற்று 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
தூத்துக்குடி 3ம் கேட் மேம்பாலம் பணி நிறைவு பெற்று 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
தூத்துக்குடி மாநகரரில் முக்கிய பிரதான சாலையான 3ம் கேட் மேம்பாலம் இருந்து வருகிறது. அதில் கனரக இலகு ரக வாகனங்கள் உள்பட பொதுமக்கள் நான்கு பகுதிகளிலும் சென்று பயன்படுத்தி வந்தனர். அதில் சில விரிசல்கள் விழுந்ததையடுத்து வரும் முன் காப்போம் திட்டம் போல் அதை சீர் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரி;க்கை வைத்தனர். இதனையடுத்து பாலம் சீரமைக்கும் பணி இரவு பகலாக பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. அப்பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அதே போல் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் விரைவாக மழைகாலத்திற்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் 2ம் கேட் 4ம்கேட் 1ம் கேட் ஆகிய பகுதிகளையும் பீச்ரோட்டையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் 4ம் கேட் மேம்பாலம் விரைவாக முடிக்கப்பட்டு வரும் 11ம் தேதி திறக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.