மோடி ஒரு ஊதாரி !பொதுத்துறை நிறுவனத்தை விற்றதுதான் மோடியின் சாதனை தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கடும்தாக்கு
ஷ்யாம் நியூஸ்
14.10.2022
மோடி ஒரு ஊதாரி !பொதுத்துறை நிறுவனத்தை விற்றதுதான் மோடியின் சாதனை தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கடும்தாக்கு
தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். ஜாதி மதம் பிரிவினை இருக்க கூடாது. தொழில்வளம் பெருகுவதற்கு பல புரிந்துணர்வு ஓப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க் உள்பட பல தொழில்கள் வரவுள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1லட்சத்து 20 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர்.மகளிருக்கு கட்டணமில்லா பஸ்ச வசதி,ஜன பல கோவில்கள் கும்பாபிஷேகம் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. பூசாரிகளுக்கு ஒய்வூதியம் வழங்கப்பட்டு பலருக்கு பல்வேறு துறைகளில் பணி நியமண ஆணை வழங்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடித்தவர்களுக்கு திறனாய்வு பயிற்சியளிக்கப்பட்டு தொழில்துறையில் அதற்கேற்ப பணிசெய்வதற்கான வழிகாட்டுதல்கள் செய்யப்படுகின்றன. 1921ல் நீதிகட்சி ஆட்சியின் போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. நம்முடைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வீட்டுமணை பட்டா, வழங்கப்பட்டு பேரூரணியில் வீடுகட்டும் பணி நடைபெற்று வருகின்றது. நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று முதலமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் வீடு தேடி முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஓருமுறை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1 கோடிக்கு மேல் பலனடைந்து வருகின்றனர் திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தெற்கு வளர்ச்சியில்லை என்ற நிலை மாறி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. திமுக ஆட்சியில் சமூகநீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் வளர்ச்சியில்லை. புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு பொறியியல் கல்லூரி உள்பட அனைத்திலும் நுழைவுத்தேர்வு திட்டத்தை கொண்டுவரவுள்ளது. உயர்கல்வி படிக்க நினைக்கும் கிராமத்தில் உள்ளவர்களும் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் அதனால் பெரிய ஆபத்து உள்ளது. என்பதால் தமிழக முதல்வர் அத்திட்டத்தை எதிர்த்து 54 சதவீதம் கல்வியில் வளர்ச்சியுள்ளது. மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழர்களின் நலனை பாதுகாத்து கொள்வோம். என்று முதல்வர் கூறியுள்ளார் பிரதமர் மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்கிறது. ஆனால் மாணவர்களின் கல்விகடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. அதானி குடும்பம் மட்டும் வளர்ச்சி பெறுகிறது. டோல்கேட் கட்டணம் உயர்வு சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வு இதற்கு காரணம் மோடி அரசு தான் எதுவுமே செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வழி வகை செய்ய எற்படுத்தியுள்ளது. 10ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை. 8 ஆண்டுகாலம் மோடி ஆட்சியில் ஏதுவும் நடைபெறவில்லை. கடந்த கால ஆட்சியில் உள்ள நல்ல தலைவர்ள் இந்திய வளர்ச்சிக்காக உறுவாக்கிய பொதுதுறை நிறுவனங்களை விற்று ஊதாரிதனமாக செயல்களை கையாளுகின்றனர்.திமுக தேர்தல் வாக்குறுதியாக 530 கொடுக்கப்பட்டு 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான 1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். அப்பா சொத்தை மகன் விற்று தின்பான் என்பதற்கேற்ப பொதுத்துறை நிறுவனம் அனைத்தையும் விற்பனை செய்தது தான் மோடியின் சாதனை வேறு அவர்களது ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் அளவில் எந்த திட்டமும் இல்லை. மதம் இனம் ஜாதி பெயரில் பிரிவினையை உருவாக்குவதுதான் இவர்களது வேலையாக உள்ளது. பெரியார் அண்ணா கலைஞர் வளர்த்தெடுத்த மண் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தியாவின் டாலர் மதிப்பு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தி மொழி தினிப்பு தேவையில்லாதது. கனிமொழி எம்.பி தொகுதியின் வளர்ச்சிக்காக அமைச்சர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். ஆனால் பிஜேபி அரசு செவிடன் காதில் ஊதின சங்கு போல் செயல்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் முதலமைச்சர் அறிவித்த காலை உணவு திட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 1805 குழந்தைகள் உணவருந்தி வருகின்றனர். மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக நடைபெறாத பல பணிகளை எல்லாம் விரைவுப்படுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைப்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 4ம் தேதி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்த முதலமைச்சர் பின்னர் மார்ச் 7ம் தேதி மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பணிகளையும் மக்கள் நலன் கருதி இந்த அரசு செய்து வருகிறது என்றார். மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ் புதியவன், ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சீனிவாசன், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், ரமேஷ், சின்னத்துரை, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், பால்மாரி, ஆர்தர்மச்சாது, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, சுயும்பு, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வ மாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், கங்காராஜேஷ், ரவீந்திரன், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி ரேவதி, சத்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் லியோனி பேசுகையில் தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கியது திமுக ஆட்சி அரை டவுசர் போட்டுக்கொண்டு பணியாற்றிய காவல்துறைக்கு முழுகால் உடை வழங்கியது திமுக ஆட்சி பெரியார் கொண்டு வந்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சி அண்ணா கலைஞர் குரல் முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் ஓலிக்கிறது. இதுதான் தந்தை மகன் என்ற உறவு கட்சி ஆண்களுக்கும் பெண்கள் இணையானவர்களே என்ற நடைமுறையை கடைபிடிக்கும் திமுக உங்களில் ஒருவன் என்று முதலமைச்சர் கூறுவது எல்லோரையும் சமநிலையில் பார்ப்பது புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் உள்பட பல தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்தவர்கள் மணநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று காவல்துறை வழக்கை முடித்து வைத்துள்ளனர். அதை செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். சென்னையில் 1921ல் நீதிகட்சி ஆட்சியின் போது தியாகராஜ செட்டியார் ஓரு பள்ளியில் அமுல்படுத்திய மதிய உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர், விரிவுபடுத்தி மதிய உணவு என்று அறிவித்தது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டதால் தான் நானும் படித்து ஆசிரியராக பணி செய்யும் அளவிற்கு உயர்ந்தேன். பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டம். ஹிந்தி தினிப்பு தேவையில்லை. தேவை என்பவர்கள் படித்துக்கொள்வார்கள் ஆனால் ஹிந்தி படித்தால் தான்இந்தியா முழுவதும் வேலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். தமிழகத்தில் ஹிந்தி படித்த பலரும் பஞ்சு மிட்டாய் விற்றுக்கொண்டும் பானிபூரி விற்றுக்கொண்டும் வருகிறார்கள் ஹிந்தி தினிப்பை என்றும் எதிர்ப்போம் மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற 5 கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்போம் திமுக ஆட்சிக்கு வந்தபின் முதல்வர் செல்லும் வழிகளில் பெண் காவலர்கள் இருப்பதை கண்டு உடனடியாக தமிழகம் முழுவதும் நான் செல்லும் பகுதிகளில் பெண் காவலர்கள் எனக்கு தேவையில்லை என்று அவர்களின் நலனை கருதி அதற்கென ஓரு சட்டத்தை அறிவித்து 24 மணி நேரமும் பணியாற்றும் காவல்துறைக்கு வாரத்தில் ஓருநாள் விடுமுறை அறிவித்து இந்தியாவில் நம் 1 முதலமைச்சர் ஸ்டாலின் என்று அனைத்து ஊடகங்களும் புகழாரம் சூட்டியுள்ளனர். 2024ல் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வென்றெடுத்து முதல்வர் ஸ்டாலின் அடையாளம் காட்டுபவர் பிரதமர் என்ற நிலை வரும். டெல்லி செங்கோட்டை பகுதிகளில் திமுக கொடி பறந்து கொண்டு நமக்கு அங்கு ஒருகோட்டை உள்ளது. எதிர்காலம் நம்முடைய காலம் இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோணி பேசினார். ஒவ்வொரு பேச்சுகளுக்கும் மத்தியில் நகைச்சுவை அனைத்து மத பாடல்கள் பாடி அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார்.