தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
ஷ்யாம் நியூஸ்
தூத்துக்குடி. அக்.20,
தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் பூஜையுடன் நடைபெற்ற நிலையில், இன்று ஐப்பசி தேரோட்டத்தை முன்னிட்டு யானை, குதிரை, சிலம்பாட்டம், வால்சுருள் விளையாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தீபாராதனை காட்டினார். பக்தர்களின் கரகோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலித்தது. தேர் துவங்கிய நிலையில் இருந்து தெற்கு ரதவீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி, கீழ ரத வீதி வழியாக தேர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிவன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
விழாவில் முக்கிய தொழிலதிபர்கள் ஏவிஎம் மணி, தெய்வநாயகம், கமலஹாசன், பாஸ்கர், லாரிபுக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமார், மாநகர திமுக மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால் மாரி, சோமநாதன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், திமுக வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், பொன்ராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, பிஜேபி மாவட்ட துணை தலைவர் சிவராமன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, பிஜேபி தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பிரதோஷ கமிட்டி ஆறுமுகம், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், கணக்கர் சுப்பையா, கண்ணன் பட்டர், மற்றும் பிரபாகர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி முன்னதாக சிவன் கோவில் தேரோட்ட வீதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.