முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதல்வர் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமான பேச்சு

 ஷ்யாம் நியூஸ்

18.10.2022

தமிழக முதல்வர் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமான பேச்சு

தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள எஸ்.ஏ.வி, காரப்பேட்டை பள்ளியில் சைக்கிள் வழங்கியப்பின் கால்டுவெல் பள்ளியில் 159 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். 

பின்னர் பேசுகையில் இந்த பள்ளி 231 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது வெள்ளைக்காரன் ஆட்சிச் செய்த காலத்திற்கு முன்பே கால்டுவெல் என்பவரால் நடத்தப்பட்டு, வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார். கலைஞர் ஆட்சியில் அது விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 21 பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. மாநகரில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி எல்லா வகையிலும் வளர்ச்சியை அடையும் கட்டமைப்புகள் துறைமுகம், விமான நிலையம், சாலை போக்குவரத்து, இரயில் போக்குவரத்து வசதிகள் இருந்து வருகின்றன. தூய்மையான மாநகரத்தை உருவாக்கும் வகையில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் 60 வார்டுகளில் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 90 டன் மக்கும் குப்பையும், 60 டன் மக்காத குப்பையும் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல நெகிலி கழிவுகளும் இருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல் நகரையும் சுத்தமாக வைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதை உங்களது பெற்றோர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் முக்கியம். விவசாயம் பார்க்கின்றவர்கள் 95 வயதிலும் இன்று வரை உழைக்கிறார்கள். அதற்கு காரணம் ஆரோக்கியம் சார்ந்த உடற்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் உள்ளங்கால் முதல் அனைத்து பகுதிகளும் ஒரே அளவு இரத்த ஓட்டம் பாய்வதால் நமது உடல் ஆரோக்கியம் பெறுகிறது. 

தற்போது, 20 வயதிலேயே பலருக்கும் சுகர் வருகிறது. விடாமுயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இருந்தால் எல்லா துறையிலும் நாம் சாதிக்கலாம். காலை எழுந்தவுடன் நமது கடமைகளை முடித்து விட்டு, பின்பு பள்ளி படிப்பு, டியூசன், பொழுதுபோக்கு மூலம் நாம் வாழ்க்கையை அனுபவிக்றோம். தற்போது விஞ்ஞான உலகமாக இருப்பதால், எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. அதில் தேவையானவைகளை மட்டுமே பார்க்க வேண்டும், படிக்க வேண்டும். முழுநேரமும் அதில் கவனம் செலுத்த கூடாது. படிப்பில் 80 சதவீதம் தேர்ச்சி, தொடர் முயற்சி பின்னர் 100 சதவீதம் தேர்ச்சி என்று தொடுவதை போல் அனைத்து மாணவ-மாணவிகளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் சீரிய திட்டமான இலவச மிதிவண்டியை வழங்கியுள்ளார். அவரது கனவை நனவாக்கும் வகையில் மாணவ-மாணவிகள் நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் தமிழகத்தின் பெருமையை இந்தியாவில் நிலைநாட்ட வேண்டும், என்று உருக்கமாக மாணவ-மாணவியர்களிடையே பேசினார். 

விழாவில் கால்டுவெல் பள்ளி தாளார் ஸ்டேன்லி வேதமாணிக்கம், தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர், உடற்கல்வி ஆசிரியர் பெலின்பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஸ் மற்றும் ஜோஸ்பர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...