தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக தூய்மைப்பணி நடைப்பெற்றது
ஷ்யாம் நியூஸ்
19.10.2022
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக தூய்மைப்பணி நடைப்பெற்றது
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 47 மற்றும் 57 சார்பாக தூய்மைப்பணித் திட்டம் டி.சவேரியார்புரம் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் இன்று (19.10.2022) நடைபெற்றது.
35 நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் முனைவர் தே.சண்முகப் பிரியா, வேதியியல் துறைப்பேராசிரியர் மற்றும் முனைவர் ஜெ.வசந்த சேனா, ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். 16.5 கிலோ மக்கும,; குப்பைகள் 68 கிலோ மக்காத குப்பைகள் (நெகிழிப்பைகள் உள்பட) நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகளால் அகற்றப்பட்டு உரக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.
இறுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் தலைவர் ரா.சரவணகுமார் தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகளின் சேவையைப் பாராட்டி நாட்டுநலப்பணித் திட்ட அணிக்கு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகளின் நலப்பணிகளை பொதுமக்களும் பாராட்டி வாழ்த்தினர்.