ஷ்யாம் நியூஸ்
05.10.2022
எந்த துறையாக இருந்தாலும் நல்ல முறையில் பணியாற்றினால் பெற்றி பெறலாம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி ஹார்பர் ரேசிங் பிஜியன் கிளப் சார்பில் 5ம் ஆண்டு புறா ரேஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தலைவர் டைகர் வினோத் தலைமை வகித்தார். செயலாளர் அந்தோணி ஆனந்த், பொருளாளர் ரைமண்ட் சாவியோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் பொன்ராஜ், வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஒவ்வொருவருக்கும் ஓவ்வொரு துறையில் ஈடுபாடு உண்டு அதில் எந்த அளவிற்கு நாம் ஆர்வம் காட்டி நல்ல முறையில் பணியாற்றுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றியும் கிடைக்கும் நம்ம உழைப்பிற்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும் உங்களுடைய முயற்சிக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பேன் என்றார்.
பின்னர் திருச்சி முதல் தூத்துக்குடி, விழுப்புரம் முதல் தூத்துக்குடி, சென்னை முதல் தூத்துக்குடி, ஆந்திரா முதல் தூத்துக்குடி, ஓங்கல் ஆந்திரா முதல் தூத்துக்குடி, மெகபுபா பாத் ஆந்திரா முதல் தூத்துக்குடி பல கிலோ மீட்டர் தூரம் புறா ரேஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏமான பெரியசாமி நினைவு சுழற்கோப்பையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
விழாவில் அன்புராஜ், அசோக், பாற்கடல் முத்து, சுரேஷ், துரை, செந்தில்குமரன், சாமுவேல், ராஜேஷ், ஹாட்லின், ஜான்சன், மரிய அந்தோணி சிலுவைபிச்சை, முத்துக்குமார், விஜய், பாலா, பிரதாப்சிங், புறாபோட்டியின் நடுவர்கள் ஜாய்ஸ்டன், சாம், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.