திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி பங்கேற்பு அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
ஷ்யாம் நியூஸ்
10.10.2022
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி பங்கேற்பு அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
இது தொடர்பாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் கட்ட சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி
13.10.2022 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள திடலிலும் 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலிலும், பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டங்களில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி. மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தூத்துக்குடி சரத்பாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடர்புடைய மாநகர, நகரக் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திட வேண்டுமெனவும் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று, பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.