நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள்
ஷ்யாம் நியூஸ்
20.10.2022
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசனுக்கு நன்றி தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்
தூத்துக்குடியில் மே 22 2018 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினரால் பொதுமக்கள் 15 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டிருந்தார் அந்த விசாரணை நேற்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது இதில் காவல்துறை அத்துமீறி பொதுமக்களை சுட்டது அம்பலம் ஆகியுள்ளது இதுகுறித்து இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த போது. நியாயமான மக்கள் போராட்டத்தை கொலைகளமாக மாற்றி 15 உயிகளை காவு வாங்கிய துப்பாக்கி சூடு தொடர்பாக நீதி அரசர் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை 4 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் விவாதிக்கப்பட்டுவிட்டது இந்த அறிக்கை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் விசாரணை முன்னெடுத்து தகவல்களை திரட்டி தனது அறிக்கையை நிறைவு செய்து இருக்கிறார் நீதியரசர் அருணா ஜெகதீசன். குற்றத்தில் நேரடியாக அல்லது ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடைய அனைவரின் பங்கையும் அம்பலப்படுத்தியுள்ளார் இந்த அறிக்கையில் அதிமுக்கிய அம்சமாக,மே 22 2018 ல் நடந்த கலவரத்தில் பொதுமக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் மேலும் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் பெயரைச் சொல்லி பட்டியலிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறார் நீதியரசர் அன்றைய முதல்வர் ,தொடங்கி அனைவரையும் பாரபட்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியரின் பொறுப்பற்ற செயலை மிக கடுமையாக கண்டித்திருக்கிறார் திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதற்கான தகவலையும் ஆவணபடுத்தியிருக்கிறார் ஒரு கலவர சூழல் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படாதது மறைந்திருந்து தாக்கியது உயிரை காத்துக் கொள்ள தப்பிய ஓடிய முயன்றவர்களை பின்னால் இருந்து சுட்டது போன்ற ஈன செயல்களை அனைத்தையும் பதிவாக்கி இருக்கிறார் நீதிபதி. குதூகலமாக படுகொலை நிகழ்த்திய கொடூர கொலைகாரன் சுடலைக்கண்ணுவின் ஒவ்வொரு நகர்வையும் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் வரம்பு மீறி நிராயுதபாணியான மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் உச்சம் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார் மரியாதைக்குரிய நீதி அரசர் .இந்த தருணத்தில் துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் விரிவான விவாத சூழலை ஏற்படுத்திய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நீதி அரசரின் பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான முதல்வரின் உத்தரவாதத்துக்கும் எங்கள் நன்றிகள், சட்டமன்றத்தில் மக்களுக்கான குரலாக ஒழித்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், தூத்துக்குடி மக்களுக்கு உங்கள் உடனிறுப்பு அவசியம் தேவை என்றும் கீழ்கண்ட கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
கோரிக்கைகள்
1. துப்பாக்கி சூட்டுக்கு திட்டமிட்டவர்கள் தூண்டியவர்கள் படுகொலையை நேரடியாக நிகழ்த்தியவர்கள் அந்த கொடுஞ்செயல் நிகழும் போது பார்த்துக்கொண்டு மௌனம் காத்தவர்கள் அனைவரின் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி துறைரீதியான நடவடிக்கையுடன் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
பணிநீக்கம் செய்ய வேண்டும் .
2.நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் பரிந்துரை செய்தது போல உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கும் காயம் ஏற்பட்டவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
3. பொருளாதார வளர்ச்சி தேவை தான் ஆனால் அதற்காக மக்கள் உயிர்களை காவு கொடுத்து வரக்கூடிய வளர்ச்சி வளர்ச்சி அல்ல என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆபத்தான ஆலைகளுக்கு அனுமதி கிடையாது என்ற கொள்கையை முடிவு எடுக்க வேண்டும்
4. முக்கியமாக எங்கள் மண்ணில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை அது இருந்த சுவடே தெரியாமல் அகற்றப்பட வேண்டும். அதன் ஆபத்தான போக்கால் ஏற்பட்ட விபரீதங்கள் அனைத்துக்கும் இழப்பீடு ஆலையிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் .
நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்களை நடிகர் ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என கூறியிருந்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என அருணா ஜெகதீசன் அறிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டைரக்டர் நடிக்க சொல்லும் நடிப்பை நடிக்கும் ரஜினிகாந்த் சினிமா போல் இந்த சம்பவத்திலும் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறினர்