ஷ்யாம் நியூஸ்
17.10.2022
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் இராஜா ராம் மோகன்ராய் 250வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி டூவிபுரம் மாவட்ட நூலக அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக சென்ற 250 மாணவிகளின் பேரணி மாவட்ட கல்வி அலுவலகத்தை சென்றடைந்தது. பெண்கள் மேம்பாடு குறித்து பள்ளி மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் சாதி ஓழிப்பு தலைப்பில் செல்வி ரோகிணி பெண்களுக்கு சொத்துரிமை செல்வி இசக்கியம்மாள் விதவை மறுமணம் செல்வி பிரியதர்ஷினி, பெண்கல்வி செல்வி சுவீகா குழந்தை திருமணம் தடை வைஷ்ணவி பேசினார்கள். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிறைவு செய்து பள்ளி மாணவியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், இருதயராஜ், பல்வேறு பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாவட்ட நூலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.