ஷ்யாம் நியூஸ்
23.10.2022
24 மணி நேரத்திற்குள் நிவாரணை உதவித்தொகை வழங்கிய தூத்துக்குடி வட்டாட்சியர் .
தூத்துக்குடி வட்டம் புதுக்கோட்டை குறுவட்டம் கோரம்பள்ளம் பகுதி 1 கிராமம் வடக்கு காலாங்கரையை சேர்ந்த கந்தன் மகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு(1) நேற்று(22.10.22) பிற்பகல் 3.30 மணியளவில் மழையுடன் கூடிய இடி, மின்னல் தாக்கியதில் கோரம்பள்ளம் குளம் கரையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு இறந்து விட்டது தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் ஆய்வாளர் சந்தனராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு இது தொடர்பாக புதுக்கோட்டை கால்நடைத்துறை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர் கால்நடை மருத்துவர் மூலம் இறந்த பசுமாடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணத்உதவித்தொகை ரூ.30,000 காசோலையாக இன்று தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் வழங்கினார் முதுநிலை வருவாய் ஆய்வாளர் டென்சி புதுக்கோட்டை ஆய்வாளர் சந்தன்ராஜ் கோரம்பள்ளம் நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் . சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் நிவாரணத் தொகை வழங்கிய வட்டாட்சியர் செல்வகுமாருக்கு விவசாயியும் மாட்டின் உரிமையாளருமான முருகேசன் நன்றி தெரிவித்தார்.