தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி புதிய கால்வாய் அமைக்கும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஷ்யாம் நியூஸ்
09.10.2022
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி புதிய கால்வாய் அமைக்கும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியாக 2008ல் தரம் உயர்த்தப்பட்ட பிறகு 5 ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. 2011ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் புறநகர் பகுதியில் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளாக மாநகராட்சி செயல்பட்டது. இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் புதிய திட்டங்கள் வகுக்கப்படாமல் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் மாநரகாட்சி பகுதியான பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலணி, ரஹ்மத்நகர், தனசேகரன் நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் பைபர் படகு மூலம் பலர் மீட்கப்பட்டனர். சில குடும்பங்களுக்கு அரசின்சார்பில் தேவையான உதவிகளை செய்தனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமி;ழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தூத்துக்குடியில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மழைநீர் தேங்காத வகையில் புதிய திட்டங்களை தயாரித்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும். என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படி மாநகராட்சி அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட புதிய திட்டங்கள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைகாலங்களில் மாநகரில் எந்த பகுதிகளிலும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையிலும் போக்குவரத்திற்கு இடையூர் இல்லாத வகையில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு கழிவு நீர் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையிலும் புறநகர் பகுதியில் உள்ள ஓடைகள் வழியாக செல்லும் வகையிலும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணிகளை ஆய்வு மேற்கொண்டு ஜெகன் பெரியசாமி அதிகாரிகளிடம் ஓப்பந்ததாரர்களிடம் மழை காலத்திற்கு முன்பு முழுமையாக நல்ல முறையில் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், நடராஜன், உடனிருந்தனர்.