ஷ்யாம் நியூஸ்
28.10.2022
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அழகேசபுரம் கிழக்கு மேற்கு முதல்தெரு நடராஜபுரம் வடக்கு தெற்கு 3வது தெரு, நந்தகோபாலபுரம் மெயின் முதல் அழகேசபுரம் மெயின் சாலை நடராஜபுரம் வடக்கு தெற்கு 2வது மற்றும் முதலாவது தெரு, அழகேசபுரம் கிழக்கு மேற்கு குறுக்கு 2வது தெரு நடராஜபுரம் வடக்கு தெற்கு சாலை, நந்தகோபாலபுரம் கிழக்கு 4வது தெரு, கிழக்கு 3வது தெரு, அழகேசபுரம் வடக்கு தெற்கு மெயின் ரோடு முதல் அமெரிக்கன் மருத்துவமணை சாலை பகுதிகளில் தார்சாலை மேம்படுத்தும் பணி, பங்களா தெரு, முதலாவது குறுக்கு தெரு, இரண்;டாவது குறுக்குசந்து வடக்கு பகுதி, 3வது குறுக்கு தெரு, பக்கிள்புரம் முதல்தெரு, 2வது தெரு, பங்காள தெரு 2வது குறுக்கு சந்து, தெற்கு பகுதி 4வது தெரு, லெவிஞ்சிபுரம், நீர்த்தேக்க தொட்டி சாலை, தார்சாலை மேம்படுத்தும் பணி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்வதற்கான குழு பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தற்போது சொத்துவரி சீராய்வு செய்வது, அவசியம் என அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.
15வது மத்திய நிதி ஆணையம் 2022 2023ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாணியம் பெறுவதற்கு மொத்த ஆண்டு மதிப்பீல் சொத்து வரி விகிதம் எவ்வளவு என அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்துவரி வசூலில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களுக்கு மானிய நிதி பெறுவதற்கு சொத்துவரி காலி மணை வரி சீராய்வு செய்வது அவசியமாகிறது. அரசானை எண் 73 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 19.7.2018 மற்றும் அரசானை எண் 76 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 26.7.2018 ஆகியவற்றில் சொத்துவரி காலிமணை வரி பொது சீராய்வு மேற்கொள்ள ஆணையிடப்பட்டு பின்பு அரசானை 150 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 19.11.2019 ன்படி சொத்துவரி சீராய்வானது நிறுத்தி வைக்கப்பட்டு சொத்துவரி காலிமணைவரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்க குழுவும் அமைக்கப்பட்டது.
மேலும் இக்குழுவானது சொத்துவரி காலிமணை வரி சீராய்வு செய்வதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்கு முன்பு சந்தை மதிப்பு குறியீடு பணவீக்கம் செலவு பணவீக்க குறியீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றை பரிசீலித்து பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்துவரியில் எந்த உயர்வும் இல்லாமலும் உள்ளாட்சி அமைப்புகளில் சொந்த வருமானத்திலும் எந்த உயர்வும் இல்லாமலும் மொத்த வருமானத்தில் சொந்த வருமானத்தில் பங்கு பெருமளவு குறைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது மாநகரங்கள் மற்றும் நகரங்களில் நிர்வாக செலவினை பொருளாதார குறியீடு உயர்ந்துள்ளதற்கு ஏற்ப பலமடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மாநகராட்சிகளில் அதிகரித்துள்ள நிதி தேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் 15வது மத்திய நிதிக்குழுவின் மாணியம் மற்றும் இதர ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்;சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி, காலி மணை வரி, சீராய்வு செய்யலாம் என சொத்து வரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது. வரி சீராய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதி ஆகியவற்றை கருத்திற் கொண்டு 2022, 2023 முதலாம் அரையாண்டு 1.4.2022 முதல் சொத்துவரி பொது சீராய்வு செய்யவேண்டும் மாநகராட்சிபகுதியில் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு அவற்றின் அமைவிடம் கட்டுமானத்தின் தன்மை மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு நாலு வகைகளாக பிரித்து வௌ;வேறு மண்டல மதிப்புகளில் அடிப்படையில் சொத்துவரி சீராய்வு செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டதின் பேரில் 12.4.2022ம் தேதி மாமன்ற தீர்மான எண் 89 மற்றும் 30.5.2022ம் தேதி மாமன்ற தீர்மாண என்113ல் அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை அளிக்க ஏதுவாகவும் மேற்கண்ட அரசானையில் அறிவுறுத்தியுள்ளவாறும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 அத்தியாயம் 5 பிரிவு 118ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியும் தூத்துக்குடி மாநகராட்சியும் 1.4.2022 முதல் காலி மணை வரிஉயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் பேசுகையில்: மாநகராட்சி மையப் பகுதியில் குருஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் அமைப்பதற்கு முழுமையாக உதவி புரிந்த கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பின்னர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. வரும் 1ம் தேதி உள்ளாட்சி தினம் கடைபிடிக்கப்படும். 3 மாதத்திற்கு ஒருமுறை மாநகராட்சி கூட்டமும் நடைபெறும். குருஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைபதற்கு மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர், நகர்நல அலுவலர் அருண்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, முத்துவேல், தனலட்சுமி, பவானி மார்ஷல், மெட்டில்டா, ரிக்டா, மரியகீதா, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ராமகிருஷ்ணன், ஜாண்;சிராணி, அதிர்ஷ்டமணி, விஜயலெட்சுமி, சந்திரபோஸ், கற்பககனி, ஜெயசீலி, எடின்டா, பொன்னப்பன், சரண்யா, சோமசுந்தரி, அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, வெற்றிசெல்வன், வீரபாகு, விஜயலட்சுமி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக எதிர்கட்சித்தலைவர் வீரபாகு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் சில குற்றச்சாட்டுக்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.