தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
ஷ்யாம் நியூஸ்
20.10.2022
தூத்துக்குடி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்ததை 1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமசந்திரன் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து வஉசிதம்பரனார் மாவட்டம் என புதிய மாவட்டத்தை துவக்கி வைத்தார். 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய மாவட்டமாக இருந்த வஉசிதம்பரனார் என்ற பல பெயர்கள் கொண்டவை நீக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பின்னர் தலைநகரின் பெயரை குறிப்பிடும் வகையில் மாற்றப்பட்டு தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள தூத்துக்குடி மாவட்டம் உருவான 37ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு சொந்தமான புல்தோட்டம் நுண்உரக்கிடங்கு மைய வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி 25 மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர் தனசிங், சுகாதார நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ஹரிகணேஷ், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உள்பட மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் துவங்கப்பட்டு 37வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு மாநகராட்;சி சார்பில் தூய்மையை கடைபிடிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாநகராட்சி மூலம் அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை தேவையான தீர்வை மற்றும் பல்வேறு பதிவு வகைகள் தாமதமின்றி நடைபெறுகிறது. சுகாதாரம் கால்வாய் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு பணிகளையும் மக்களுக்கு செய்து கொடுத்து நீண்டகால பல்வேறு குறைகளுக்கு தீர்வு கானும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது என்றார்.