தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பரதர் நலசங்கம் நன்றி தெரிவித்தனர்.
ஷ்யாம் நியூஸ்
27.10.2022
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பரதர் நலசங்கம் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகருக்கு முதலில் வல்லநாட்டிலிருந்து குடிதண்ணீர் திட்டம் கொண்டு வந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்துக்கு தமிழக அரசின் சார்பில் அவரது புகழை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடற்கரை சாலையில் உள்ள ரோச்பூங்காவில் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அமைப்புகள் மாநகர மைய பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெணகள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜ், முன்னிலையில் பல்வேறு அமைப்புகள் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் பாளை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா பகுதியில் கிழக்கு பக்கம் 20 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே குரூஸ்பர்னாந்து சிலை இருக்கும் அதை அரசு சார்பில் அகற்றும் திட்டம் எதுவும் இல்லை வீண் வதந்திகளை நம்பவேண்டாம் புதிய இடம் தேர்வு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி கோரப்படும் இதுசம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் அனுமதி பெறப்படும் இந்தப்பணிகள் முடிந்த பின்னர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்திருந்தார்.
பரதர் நல தலைமைச்சங்க கோரிக்கையை ஏற்று குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் நமது மக்கள் விரும்பிய இடத்தில் அனுமதி அளித்து விரைந்து பணி முடிக்க உறுதி தந்த அமைச்சர் மேயர் ஆகியோருக்கு இதனையடுத்து பரதர் நல தலைமைச் சங்கம் சார்பில் தலைவர் ரெனால்;டு வில்லவராயர், பொதுச் செயலாளர் அந்தோணிச்சாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, பாத்திமா நகர் பங்குதந்தை ஜேசுதாஸ், பர்னாந்து உதவி பங்குதந்தை விமல்ஜென், ஓலிபர், சில்வா, நிர்வாகிள் சேவியர் வாஸ், ஞாயம் ரோமால்ட், உள்ளிட்ட பலர் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டர், ஆகியோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில திமுக மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், கவுன்சிலர் பவாணி மார்ஷல், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, ஜோஸ்பர், அல்பட், பரதர்நல அமைப்பை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.