ஷ்யாம் நியூஸ்
20.10.2020
தூத்துக்குடிக்கு அழகு சேர்க்கும் நம்ம தூத்துக்குடி செல்பி பாயின்ட் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்;சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக்கொண்ட பின் 60 வார்டுகளிலும் உள்ள குறைகளை தனது நேரடி கவனத்திற்கு வருவதை குறிப்பேடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்கும் பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறார். அதே போல் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டு அதற்கு தடையாக இருந்த சின்னஞ்சிறு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வரும் நிலையில் மேம்பாலம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.
அப்பணியை ஆய்வு செய்தபின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவும் இருக்க வேண்டும். என்ற தொலை நோக்கு திட்டத்தை உருவாக்கி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டுமக்களுக்காக உழைக்கும் முதல்வர் வழியில் செயல்படும் மாநகராட்;சி நிர்வாகம் பாரபட்சமின்றி அனைவருக்கும் தேவையான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பது எங்களது கடமை என்ற கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம். நான்கு வழிகளிலும் கட்டமைப்பு வசதியுள்ள மாநகர் துறைமுகம் மூலம் பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பெரிய துறைமுகம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த துறைமுக மாநகர மக்களுக்கு புதுமையான திட்டங்களை செயல்படுத்தும் விதமாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது நெகிழிகளை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். தூய்மையான நகரமாகவும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வெளிநாட்டிலிருந்து வரும் தொழில் நிறுவனங்களை கவரும் வகையில் இதுபோன்ற பணிகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்;சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்ற லட்சியத்தை அடையவேண்டும். என்ற என்னத்தோடு பணியாற்றும் எங்களுக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் இந்த செல்பி பாயின்ட் விரைவில் பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் செந்தில்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், உடனிருந்தனர்.