ஷ்யாம் நியூஸ்
07.10.2022
தூத்துக்குடியில் சூரசம்ஹார விழா மூன்று கோவில்களில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடியில் பிரதிபெற்ற தெப்பகுளம் மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்களில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான சூரசம்ஹார விழா நடைபெற்றது. அத்திருக்கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
விழாவில் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்காராஜேஷ், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன், செயலாளரும் மாவட்ட திமுக பிரதிநிதியுமான சக்திவேல், பொருளாளரும் அதிமுக வட்டச்செயலாளருமான திருச்சிற்றம்பலம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், முன்னாள் அறங்காவலகுழு உறுப்பினர் அறிவழகன், மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், ரமேஷ், ஜோதிசங்கர், கணேசன், மாரிமுத்து, ஜெ பேரவை துணைச்செயலாளர் டைகர் சிவா, சிவன் கோவில் பிரதோசகமிட்டி நிர்வாகி ஆறுமுகம் உள்பட கோவில் நிர்வாகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சென்னை சென்ற அமைச்சர் கீதாஜீவன் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர பகுதி பேரூர் செயலாளர்கள் கட்சி ரீதியான நிர்வாகிகள் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற இருக்கின்றனர்.
.